Get Mystery Box with random crypto!

இன்றைய கூட்டு பிரார்த்தனை ' இயற்கை வேளாண் விஞ்ஞானி முனைவர் க | ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

இன்றைய கூட்டு பிரார்த்தனை

" இயற்கை வேளாண் விஞ்ஞானி முனைவர் கோ. நம்மாழ்வார்" அவர்களுக்கு பெருமை சேர்ப்போம்

அழகிய பசுமையான பிரபஞ்சம்

உலகில் உள்ள அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயம் மட்டுமே செய்யட்டும்!

அனைத்து மக்களும் அந்த அந்த நாட்டு இன மாடுகள், கோழிகள், ஆடுகள்... என நாட்டு இன கால்நடைகளை மட்டுமே வளர்க்கட்டும்!

இயற்கையில் விளைந்த பொருட்களை மட்டுமே அனைத்து மக்களும் தயாரிக்கட்டும்!

இயற்கையில் விளைந்த பொருட்களை மட்டுமே அனைத்து மக்களும் வாங்கி பயன்படுத்தட்டும்!

உலகம் முழுவதும் உள்ள தயாரிப்பாளர்கள் அனைவரும் இயற்கையான பொருட்களை மட்டுமே தயாரிக்கட்டும்!

மக்களுக்கு நல்லது செய்யும் வகையான பொருட்களை மட்டுமே தயாரிப்பாளர்கள் உற்பத்தி செய்யட்டும்!

இயற்கையாக தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கும் அதை விற்பனை செய்யும் தயாரிப்பாளர்களுக்கும் அரசு தானாகவே முன்வந்து துணை நிற்கட்டும்!

அரசும் அரசு அதிகாரிகளும் இயற்கையான பொருட்களை தயாரிப்பவர்களை ஊக்குவிக்கட்டும்!

உலகம் முழுவதும் உள்ள அனைத்து உணவகங்களும் இயற்கை உணவு வகைகளை மட்டுமே தயாரித்து மக்களுக்கு வழங்கட்டும்!

உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களும் இவ்வழகிய பசுமையான பிரபஞ்சத்தில் இயற்கையுடன் இணைந்த வாழ்வை இன்பமுடன் வாழ வழிவகை கூறிய " இயற்கை வேளாண் விஞ்ஞானி முனைவர் கோ. நம்மாழ்வார்" அவர்களுக்கு பெருமை சேர்ப்போம்!


வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!!
வாழ்க வளமுடன்!!!