Get Mystery Box with random crypto!

இன்றைய வளமான கூட்டு பிரார்த்தனை ஆக்கபூர்வமான செயல்கள் செய்வோ | ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

இன்றைய வளமான கூட்டு பிரார்த்தனை

ஆக்கபூர்வமான செயல்கள் செய்வோம்,
வளம் பெறுவோம்.

அனைவர் மனதிலும் ஆக்கபூர்வமான எண்ணங்கள்
மேலோங்கி நிற்கிறது;

ஆக்கபூர்வ செயல்கள் பற்றி பேசவே ஊரெங்கும் மேடைகள் போடப்படுகின்றன;

அனைவரும் நல்லதை மட்டுமே செய்கின்றனர்;

அனைத்து மக்களும் நல்லவர்களாக இருக்கின்றனர்;

நாம் செய்கின்ற
ஆக்கபூர்வமான செயல்கள்,
நமக்கு நல்லதை மட்டுமே தருகின்றன;

இந்த உலகம் முழுவதும் எல்லாருக்கும் எல்லா விதத்திலும் நல்லது மட்டுமே நடக்கிறது;

இந்த அமைதி பிரபஞ்சம் முழுவதும் ஆக்கபூர்வமான செய்கைகள் மட்டுமே பரவி இருக்கிறது;

அதனால் மக்கள் அனைவரும்
நலமுடன் வளமுடன் நிம்மதியாக மகிழ்ச்சியாக விழிப்புடன் வாழ்கிறார்கள்;

நல்லனவற்றை தந்த பிரபஞ்ச பேராற்றலுக்கு
நன்றி! நன்றி! நன்றி!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!