Get Mystery Box with random crypto!

இன்றைய கூட்டு பிரார்த்தனை மரம் வளர்க்கிறேன் மரம் வளர்க்கிற | ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

இன்றைய கூட்டு பிரார்த்தனை

மரம் வளர்க்கிறேன்
மரம் வளர்க்கிறேன்
ஏன்!!!!!!

பசுமை நிறைந்த இலைகள்
என் கண்களை
குளிர்ச்சியாக்குகிறது

மரத்தின் நிழல்
என்னை
இளைப்பாற்றுகிறது

மரத்தில்
பூக்களின் மணம்
என் மனதை
மகிழவைக்கிறது

மரத்தின் காய்கள்
உணவாகி
உடலின் ஆரோக்கியத்தை
கூட்டுகிறது

மரம் தரும் கனிகள்
என் நாவை
சுவையில்
திளைக்கச்செய்கிறது

மரத்தின் காற்று
எனக்கு
பேராற்றலாகிறது

மரத்தின்
மாபெரும் வளர்ச்சி
மழையாகி
என் உயிராகிறது

மரம் வளர்க்கிறேன்
மரம் வளர்க்கிறேன்
ஏன்!!!!!!

என்றாவது ஒருநாள்
இறைவனின்
அருகில் நான் நின்றுகொண்டு
இந்த உலகை
சுற்றி பார்க்கும்போது
இந்த பூமி பச்சைபசேலென
அமைதி பூட்டி
அழகாய் காட்சியளிக்கும்
என்பதால்

எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ்க

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்