Get Mystery Box with random crypto!

இந்திய அரசியலமைப்பு 1)மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரை ந | Current affairs Tamil 📝📌

இந்திய அரசியலமைப்பு

1)மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரை நியமனம் செய்பவர் யார்? ஆளுநர்

2)ஒரு மாநிலத்தின் சட்டமேலவையை உருவாக்கும் அல்லது நீக்கும் அதிகாரத்தைக் கொண்டது எது? பாராளுமன்றம்

3)குடியரசுத் தலைவர் பதவி மற்றும் குடியரசு துணைத் தலைவர் பதவி ஆகியவை காலியாக உள்ளபோது குடியரசுத் தலைவராகத் செயல்படுபவர் யார்? இந்தியாவின் தலைமை நீதிபதி

4)குடியரசுத் தலைவர் பதவி விலக விரும்பினால் அவர் யாரிடம் அவருடைய பதவி விலகல் கடிதத்தை அளிக்க வேண்டும்? குடியரசுத் துணைத் தலைவர்

5)நெருக்கடி நிலை காலத்தில் தற்காலிகமாக அடிப்படை உரிமைகளை இரத்து செய்யும் கூறானது எந்த அரசியலமைப்பு சட்டத்திலிருந்து பெறப்பட்டது? ஜெர்மனியின் வெய்மர் அரசியலமைப்புச் சட்டம்

6)அரசியலமைப்பு அவையில் குறிக்கோள் தீர்மானம் கொண்டு வந்தவர் யார்? ஜவகர்லால் நேரு

7)எந்த குழுவின் பரிந்துரையின்படி அடிப்படைக் கடமைகள் இயற்றப்பட்டது?ஸ்வரண்சிங் குழு

8)முகப்புரையை அரசியலமைப்பின் அடையாள அட்டை என்று கூறியவர் யார்?என்.ஏ பல்கிவாலா

9)இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடையாள அட்டை என அழைக்கப்படுவது எது?முகப்புரை

10)குடியரசுத் தலைவருக்கான தேர்தலை நடத்துபவர் யார்?
இந்தியத் தேர்தல் ஆணையம்