Get Mystery Box with random crypto!

நவம்பர் 1 பள்ளிகள் திறப்பு : பள்ளிக்கல்வித்துறையின் புதிய விளக | Tamil News Daily

நவம்பர் 1 பள்ளிகள் திறப்பு : பள்ளிக்கல்வித்துறையின் புதிய விளக்கம்!!

நவம்பர் 1ஆம் தேதி ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது . தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று குறைந்துள்ளதால் , கடந்த செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் 9,10, 11, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு , நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன . இந்நிலையில் , தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் , நவம்பா் 1 ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ , மாணவிகளுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது . இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது . அதில் , காலை முதல் மாலை வரை வழக்கம்போல் முழு நேரமும் வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

View full article