Get Mystery Box with random crypto!

தற்போதைய நிலவரப்படி 700++ பேர் நமது பேட்ச் மாணவர்கள் மாணவிகள் | SAIS BOOKS UPDATE ONLY

தற்போதைய நிலவரப்படி 700++ பேர் நமது பேட்ச் மாணவர்கள் மாணவிகள் தரமாக உள்ளனர். உடல் மெய்சிலிர்க்கிறது இன்னும் முறைப்படி தகவல் வாங்க வில்லை அதையும் வாங்கி பார்த்தால் கண்ணீர் வரும் என்று நம்புகிறேன். இதை மற்றவர்களை புண்படுத்தும் நோக்கில் பதிவு செய்ய வில்லை. அனைவரும் ஒரு சில உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும். இத்தனை வருட அனுபவத்தில் சொல்கிறேன் நமது சாய்ஸ் யில் படிக்க நீங்கள் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் அன்றாட செலவழிக்கும் 2 நாள் செலவை கட்டணமாக பெற்று கொண்டு உங்களுக்கு இறுதி நாள் வரை உழைப்பு தந்து கொண்டே இருந்தோம். நீங்களும் தேர்வை எதிர்கொண்டு எங்களுடன் நம்பிக்கை வைத்து பயணித்தீர்கள் அப்படி பயணித்தவர்கள் இன்று வாட்ஸ் அப்பில் குடும்பத்துடன் ஆடியோ தந்துள்ளனர். அதில் ஒரு 6 மாணவி ஒன்றாக டீம் அமைத்து இரண்டாவது முறை என்று நமது பேட்ச் மட்டும் படித்தவர்கள் 5 பேர் 164+ என்று கூறியது மன தைரியத்தை தருகிறது. இன்று மாலை சில விஷயங்களை தகவல் தருகிறேன் சற்று காது கொடுத்து கேளுங்கள். அடுத்த வருடமும் குரூப் 4 நடக்கும். மெயின் தேர்வு ஒரு பக்கம் சுலபமாக தான் இருக்கும். குரூப் 1 தேர்வையும் ஒரு கை பாருங்கள். டெட் தேர்வையும் எழுதுங்கள். நமது கனவு மெய்ப்பட வேண்டும் என்பதற்காக நாம் படிக்க வேண்டும் ஆனால் இனி சற்று ஸ்டைல் மாற்றி படிக்க வேண்டும்.ஏனெனில் ஒரே ஸ்டைலில் படிக்கும் போது அது போர் அடிக்கும். ஆகையால் சில விஷயங்கள் உங்களிடம் மாலை பேச உள்ளேன். நன்றி