Get Mystery Box with random crypto!

🪙BITCOIN TRADING COMPANY ( DILIP)

टेलीग्राम चैनल का लोगो nathiyora_nanalgal — 🪙BITCOIN TRADING COMPANY ( DILIP) B
टेलीग्राम चैनल का लोगो nathiyora_nanalgal — 🪙BITCOIN TRADING COMPANY ( DILIP)
चैनल का पता: @nathiyora_nanalgal
श्रेणियाँ: शिक्षा
भाषा: हिंदी
ग्राहकों: 648
चैनल से विवरण

⏬⏬⏬⏬⏬⏬⏬⏬⏬⏬
பொன் மொழிகள்
தன்னம்பிக்கை பதிவுகள்
கதைகள்
கட்டுரைகள்
கவிதைகள்
வரலாற்றுப் பதிவுகள்
ஆன்மீகம்
விழிப்புணர்வு
பதிவுகள்
⏫⏫⏫⏫⏫⏫⏫⏫⏫⏫

Ratings & Reviews

4.00

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

2

3 stars

0

2 stars

0

1 stars

0


नवीनतम संदेश 10

2022-06-05 11:12:34
* ஆனந்த யாழ் *

*பல்சுவைக் கதம்பம்.*


*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​*


*சமையல் எரிவாயு உருளை தீரும் சமயத்தில் அதில் கசிவு ஏற்பட்டு வாடை வீசுவது ஏன்?*



சமையல் எரிவாயுவிற்கு வாசனை கிடையாது. பாதுகாப்பு கருதி அதில் வாசனை சேர்க்கப் படுகிறது. இந்த வாசனை எரிவாயு கசிவை அறிய உதவுகிறது.


எரிவாயு உருளையினுள் திரவமயமான பெட்ரோலிய வாயு நிரப்புவதற்கு முன்பு வாசனை திரவம் நிரப்பப்படுகிறது. எரிவாயு வாசனை திரவத்துடன் கலந்து வாயு ரூபத்தில் வெளிவந்து அடுப்பு பர்னரில் முழுவதுமாக எரிந்து விடும்.

எரிவாயு தீர... தீர... திரவ பெட்ரோலிய வாயு குறைந்து, வாசனை திரவத்தின் சதவீதம் கூடி, பர்னரில் எரிவாயு முழுவதுமாக எரியும். அதே சமயத்தில் அளவுக்கு அதிகமான வாசனை வெளிவரும்.

இதுவே எரிவாயு உருளை தீரும் சமயத்தில் வாசனை அதிகமாக வெளிவருவதற்கான காரணம் ஆகும்.
82 viewsPrakash.G. Kannan, 08:12
ओपन / कमेंट
2022-06-05 11:12:09
77 viewsPrakash.G. Kannan, 08:12
ओपन / कमेंट
2022-06-05 11:12:08 * ஆனந்த யாழ் *

*பல்சுவைக் கதம்பம்.*


*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​*



*World environment day 2022: 'வெள்ளைப் பூக்கள் எங்கும் மலரவே': சுற்றுச்சூழல் தினம் ஏன்? தேவைகள் என்ன?*



சுற்றுச்சூழல் :

நம்மையும் நம்மை சுற்றியிருக்கும் இயற்கையான சூழலான மரம் , செடி , கொடி , பிற உயிர்கள் அனைத்தையும் சுற்றுச்சூழல் என அழைக்கிறோம்.18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொழிற்புரட்சி தொடங்கி, புவி வெப்பமடைதல், காற்று, நீர் மற்றும் நிலத்தின் மாசுபாடு மற்றும் பல்லுயிர் இழப்பு போன்ற பரவலான சுற்றுச்சூழல் பாதிப்புகளை மனிதன் ஏற்படுத்த துவங்கி விட்டான்.


சுற்றுச்சூழல் தினத்தின் அவசியம் :

நமது இயற்கைக்கு மனிதனால் ஏற்படும் ஆபத்துக்களை எடுத்துரைக்கவும், அதைப் பாதுகாக்க மக்களை வலியுறுத்தவும்தான் சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day )கொண்டாடப்படுகிறது.



உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day ): வரலாறு

உலக சுற்றுச்சூழல் தினம் 1972 ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற மனித சுற்றுச்சூழலுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) தலைமையிலான வருடாந்திர நிகழ்வு, ஜூன் 5, 1973 இல் முதன்முதலில் கடைப்பிடிக்கப்பட்டது. ஜூன் 5ஆம் தேதி தொடங்கிய மாநாடு ஜூன் 16ஆம் தேதி வரை நடைபெற்றது . 1987 முதல், இந்த நிகழ்வு பல்வேறு நாடுகளில் சுழற்சி அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, உலக சுற்றுச்சூழல் தினம் ஸ்வீடனில் நடைபெறுகிறது. 50 ஆண்டுகால நிறைவையடுத்து இது Stockholm+50. என அழைக்கப்படுகிறது.

தீம் :

இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினக் (World Environment Day ) கொண்டாட்டத்திற்கான கருப்பொருள் 'ஒரே ஒரு பூமி.' இதுவே 1972 ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற மாநாட்டின் முழக்கமாகவும் இருந்தது, இது ம‌னித செயல்கள் நமது சுற்றுச்சூழலுக்கு மாற்ற முடியாத சேதத்தை ஏற்படுத்துவதால், நமது உயிர்க்கோளத்திற்கு மேலும் சேதம் ஏற்படுவதைக் குறைக்க அல்லது தடுக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது என்பதை வலியுறித்துகிறது.


நோக்கம் :

மனித நடவடிக்கைகளால் வெளிவரும் பசுமை இல்ல வாயுக்கள் உலக வெப்பநிலையை பாதுகாப்பற்ற நிலைக்கு உயர்த்கதுகின்றன.பிளாஸ்டிக் போன்ற பொருட்களை பயன்படுத்துவது கடவாழ் உயிரினங்களை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பது நாம் அறிந்ததே. இது மனித இடமாற்றத்திற்கு வழிவகை செய்யலாம். அதே நேரம் புவியில் உள்ள தாவரங்கள் , விலங்குகள் , பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் அழியும் அபாயமும் உள்ளது. இது மனித அழிவிற்கு வித்தாக அமையும். எனவே உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day)நமது பூமியைப் பாதுகாக்க சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசரத் தேவையை எடுத்துக் காட்டுகிறது.


*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​*
82 viewsPrakash.G. Kannan, 08:12
ओपन / कमेंट
2022-06-05 11:11:29
77 viewsPrakash.G. Kannan, 08:11
ओपन / कमेंट
2022-06-05 11:11:28 * ஆனந்த யாழ் *

*ஆன்மீக தகவல்.*


*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​*


*சிவலிங்கத்தின் தத்துவம்!*



சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் அது.


சிவத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது.

நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு. உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும் என்கிறது உபநிடதம். சிவத்தின் இணைப்பால் அம்பாளுக்கு ஸர்வமங்களா என்ற பெயர் கிடைத்தது.

இயற்கை தெய்வன் சிவம். பாண லிங்கம் இயற்கையில் விளைந்தது.

மார்க்கண்டேயனை சிரஞ்ஜீவியாக்கியதும், கண்ணப்பனை மெய்யப்பனாக்கியதும் சிவலிங்கம்தான். லிங்கத்தில் எதை அர்ப்பணித்தாலும் ஒட்டிக்கொள்ளாது. அபிஷேகத் தண்ணீர் தங்காது. அணிகலன்கள் அணிய இயலாது. வஸ்திரம் உடுத்த இயலாது. அங்க அடையாளங்கள் தென்படாததால் அவன் உருவமற்றவன் என்பதை உணர்த்தும். என்னில், எந்தப் பொருளும் ஒட்டுவதில்லை என்று சொல்லாமல் சொல்கிறது சிவலிங்கம்.

சிவலிங்கம், மௌனமாக மனிதனுக்கு வழிகாட்டுகிறது. அசையாத சிவலிங்கம், உலகை அசைய வைத்து இயக்குகிறது. அவன் அசையாமலே உலகம் அசையும். உடல், உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும் இன்றி, எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான் என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம்.

உடல் உறுப்புகள் இருந்தால் அவற்றின் மூலம் ஆசாபாசங்களில் சிக்கித் தவித்து, வெளிவர முடியாமல் திண்டாடி, கிடைத்த பிறவியை பயனற்றதாக்கும் நிலை ஏற்படும்.

ஆசைகளை அறுத்தெறிந்தால், நம் உடலுறுப்புகள் சிவத்தோடு இணைந்துவிடும்; பிறவிப் பயன் கிடைக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது சிவலிங்கம்.

ஓம் நமசிவாய.

சிவாய நம.


*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​*
83 viewsPrakash.G. Kannan, 08:11
ओपन / कमेंट
2022-06-05 11:11:02
79 viewsPrakash.G. Kannan, 08:11
ओपन / कमेंट
2022-06-05 11:11:01 * ஆனந்த யாழ் *

*ஆன்மீக தகவல்.*


*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​*



*நான்கு புஜங்களுடன் பள்ளி கொண்ட பெருமாள்..... அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில்...!*



இந்த கோயில் எங்கு உள்ளது?

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருநாங்கூர் என்னும் ஊரில் அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில் அமைந்துள்ளது.


இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

மயிலாடுதுறையில் இருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் திருநாங்கூர் என்னும் ஊர் உள்ளது. திருநாங்கூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

கிழக்கு பார்த்த இத்தலத்தில் பெருமாள் ஆதிசேஷன் மீது நான்கு புஜங்களுடன் பள்ளி கொண்ட பெருமாளாக அருள்பாலிக்கிறார்.

தனது தலையையும், வலது கையையும் மரக்கால் மேல் வைத்து கொண்டு, இடது கரத்தை இடுப்பின் மீது வைத்த நிலையில் காட்சியளிக்கிறார். இவரது தலைப்பக்கம் ஸ்ரீதேவியும், பாதத்தில் பூமாதேவியும் வீற்றிருக்கின்றனர்.

கருவறையில் லட்சுமி நாராயணர், ஸ்ரீதேவி, பூமாதேவி, சக்கரத்தாழ்வார், சந்தானகோபால கிருஷ்ணன் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.

இக்கோயிலில் மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் வேத விமானம் எனப்படுகிறது.

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இத்தலம் மட்டும் தான் 'அம்பலம்" என அழைக்கப்படுகிறது.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 37வது திவ்ய தேசம் ஆகும்.

வேறென்ன சிறப்பு?

திருநாங்கூர் வந்த 11 பெருமாள்களில், இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆவார். இவரை வணங்கினால் ஸ்ரீரங்கம் பெருமாளை வணங்கியதற்கு சமம்.

இக்கோயிலை 'பள்ளிகொண்ட பெருமாள் கோயில்" என்றும் கூறுவர்.

சிவன், செங்கமல நாச்சியார் ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர்.

இகோயிலில் செங்கமலவல்லி தாயாருக்கு தனிச்சன்னதியும் அமைந்துள்ளது.

மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி 12 ஆழ்வார்கள், அனுமன், சக்கரத்தாழ்வார் ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

இத்தல பெருமாளை வணங்கினால் அரசாளும் வல்லமை கிடைக்கும், அரசு பதவிகள் சம்பந்தப்பட்ட பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

இத்தலத்தில் வேண்டுதல்கள் நிறைவேறியதும் பெருமாளுக்கு பொங்கல் படைத்தும், துளசி அர்ச்சனை செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.


*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​*
84 viewsPrakash.G. Kannan, 08:11
ओपन / कमेंट
2022-06-02 16:55:34
வைகறையின் மெல்லிய ஒளித் தூறலில்...

குயிலோசையில் கிறங்கி...

உதிர்கின்றன பவள மல்லிகைகள்....!

நீ உன் முகத்தின் வாசல்களைத் திறக்கிறாய்...

உன் மீது நின்று ஆலாபனை செய்கிறது தண்ணீர்...

ஈர ஸ்வரங்களில் நீ உன் வீணையை நீராட்டுகிறாய்...!

வீட்டைச் சுற்றித் தும்பிகள் மிதக்கின்றன...

நீ உன் மேகத்தை உலர்த்துகிறாய்...!

உன் ஜன்னலுக்கு நிழல் தரும் கிளையில்...

கிளிகளின் மாம்பழக் கூச்சல்..

நீ உன் பாதியழகை உடுத்துகிறாய்...!

பட்டாம்பூச்சிகள் உன் தோட்டத்துப் பூக்களில்...

தேனுண்ணுகின்றன...!

உணவு மேசைக்கு முன் நீ உட்கார்ந்திருக்கிறாய்...!

உனக்கு முன்னால் வீட்டிலிருந்து வெளியேறுகிறது தென்றல்....!

தென்றலுக்குப் பின்னால் நீ...

இயற்கையோடு போட்டியிட்டு..

காதலால் பெற முடியாது உன்னை...

பெருங்கருணையால்..

நீயாகப் பொழிந்தால் தான் உண்டு...!



பழனிபாரதி.



*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​*
217 viewsPrakash.G. Kannan, 13:55
ओपन / कमेंट
2022-06-02 16:54:56
கடற்கரையில் நடந்த உன் பாதங்களை...

என் உள்ளங்கைகளில் வாங்கி...

ஒரு மணல் கடிகாரம் செய்திருக்கிறேன்...

உனக்காக காத்திருக்கும் பொழுதில்...

என் உயிர் எப்படிச் சரிகிறதென்பதை உனக்குக் காட்டுவதற்காக...!



மலையில்லாத என் ஊருக்கு உன் இதயத்தை அனுப்பி வை....!

நதியில்லாத உன் ஊருக்கு என் கண்ணீரை அனுப்புகிறேன்...

கண்களில் இல்லையெனில் பரவாயில்லை...

நீ என் கண்ணீரிலாவது இரு...!



நேற்று தற்கொலை முனைக்கு போயிருந்தேன்...!

பள்ளதாக்கில் என்னைப் போல் ஒருவன் செத்துக் கிடந்தான்...!

உன்னைப் போல் ஒருத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்...!



பழனிபாரதி.



*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​*
116 viewsPrakash.G. Kannan, 13:54
ओपन / कमेंट
2022-06-02 16:54:24
ஆடிப்பெருக்கு நதியில்....


நீ விளக்குகளை மிதக்க விடுகிறாய்...!

விளக்கோடு உன்னையும் ஏந்திக் கொண்டு போக...

உன் காலடியில் அலை மோதுகிறது நதி...!



தொல்பொருள் ஆராய்ச்சியைப்போல
அகழ்ந்து பார்....

உன்னை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே....


உன்னோடு வாழ்ந்த என் கண்கள்
விரல்கள்
இதழ்கள்
இதயம்
அங்கங்கே புதைந்து கிடக்கும்...!



பூதக் கண்ணாடியில் பார்த்தாலும்...

தேவதையாகத் தான் தெரிகிறாய் நீ...!




பழனிபாரதி.


*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​*
94 viewsPrakash.G. Kannan, 13:54
ओपन / कमेंट