Get Mystery Box with random crypto!

#PunishTheCorrupt #RationScam #BlacklistChristy கடந்த அதிமுக ஆ | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

#PunishTheCorrupt #RationScam #BlacklistChristy
கடந்த அதிமுக ஆட்சியில் மிகவும் அப்பட்டமாக செய்யப்பட்ட ஊழல் இது. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு வாங்கும் பொருட்கள் சந்தை விலையை விட மிகவும் அதிகமான விலையில் வாங்கப்படுகின்றன. அதுவும் ஒரே நிறுவனத்திடம் தொடர்ந்து வாங்கப்படுகிறது. டெண்டரில் போட்டி போடுவதும் ஒரே நிறுவனமாக தான் இருக்கிறது. இதன் மூலம் அதிமுக ஆட்சியில் சுமார் 2028 கோடி இழப்பு தமிழ்நாடு அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அறப்போர் கொடுத்த அழுத்தம் காரணமாக திமுக அரசு டெண்டர்களில் போட்டியை உருவாக்கியது. அதன் மூலம் அதிமுக ஆட்சியில் துவரம் பருப்பு கிலோ 143 ரூபாய் என்று டெண்டர் கொடுத்த கிறிஸ்டி நிறுவனம் கிலோ 87 ரூபாய் என்று டெண்டர் கொடுக்கிறது. இந்த ஒரு டெண்டர் மூலம் மட்டுமே 100 கோடி ரூபாய் சேமிக்கப்படுகிறது.

ஆனால் கடந்த ஆட்சியில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய அதே நிறுவனம் அடுத்தடுத்த டெண்டர்களை எடுக்கிறது. 2000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியவர்களை தொடர்ந்து டெண்டர் எடுக்க அனுமதிப்பது ஏன் என்ற கேள்விக்கு இது வரை திமுக அரசு பதில் கொடுக்கவில்லை. இந்த இழப்புக்கு காரணமாக இருந்த முன்னாள் அமைச்சர் காமராஜ், முன்னார் செயலாளர் சுதா தேவி IAS மற்றும் இதர அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழு ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளது.

அறப்போர் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? சட்டம் தன் கடமையை செய்யுமா? Christy நிறுவனம் Blacklist செய்யப்படுமா?