Get Mystery Box with random crypto!

Covid மரணங்கள் குறித்த அறப்போர் இயக்கத்தின் ஆய்வறிக்கையை எளிதி | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

Covid மரணங்கள் குறித்த அறப்போர் இயக்கத்தின் ஆய்வறிக்கையை எளிதில் புரிந்து கொள்ள இந்த தகவல்களை அறிந்து கொண்டாலே போதும்.

Corona இரண்டாவது அலை தீவிரமாக இருந்த 2021 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சராசரியாக இதற்கு முந்தைய வருடங்களில் இதே ஏப்ரல் மே மாதங்களில் ஏற்பட்ட மரணங்களை விட அதிக அளவு மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இதை படித்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றும்? ஆமா Covid இறப்புகள் அதிகமாக இருந்ததால் இறப்பு எண்ணிக்கை இந்த இரண்டு மாதங்களில் அதிகமாக இருந்திருக்கும் என்று தானே தோன்றும்!

ஆனால் அங்கே தான் டுவிஸ்ட்டு. இந்த இரண்டு மாதங்களில் 6 மருத்துவமனைகளில் மொத்த இறப்பு எண்ணிக்கை 11699 என்று இருக்க, தமிழ்நாடு அரசாங்கம் இந்த இரண்டு மாதங்களில் இந்த 6 மருத்துவமனைகளில் Corona இறப்பு எண்ணிக்கை வெறும் 863 என்று அறிவித்துள்ளார்கள். இதில் 2019 கணக்குப்படி இறந்தவர்கள் எண்ணிக்கையான 4437ஐ கழித்து விட்டு பார்த்தால் கூட கூடுதலாக 7262 இறப்பு எண்ணிக்கை வருகிறது.

இப்போ கேள்வி என்ன என்றால், வெறும் 6 மருத்துவமனைகளில் 7262 இறப்புகளில் வெறும் 863 இறப்புகளை மட்டுமே Covid இறப்புகள் என்று அறிவித்துள்ள அரசாங்கம் தமிழகம் முழுவதுமுள்ள 500 Covid மருத்துவமனைகளிலும் இதே போல எண்ணிக்கை குளறுபடி செய்திருந்தால் மொத்த Covid இறப்பு எண்ணிக்கை தமிழகத்தில் 1 லட்சத்தை தாண்டுமே? அப்படி Covid இறப்புகள் மூடி மறைக்கப்பட்டு இருந்தால் பெற்றோர்களை இழந்த அடித்தட்டு நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசாங்கத்தின் உதவி தொகை எவ்வாறு சென்றடையும்?

தமிழ்நாடு அரசு தற்பொழுது என்ன செய்ய வேண்டும்?
முதலில் தவறு நடந்துள்ளதை ஒப்புக்கொள்ள வேண்டும். தனி குழு அமைத்து முறையாக ஆய்வுகள் நடத்தி சரியான இறப்பு கணக்குகளை வெளியிட வேண்டும்.

அறப்போர் ஆய்வறிக்கை படிக்க:
https://arappor.org/Arappor-Citizensreport_Coronadeath
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு பார்க்க: