Get Mystery Box with random crypto!

ஏப்ரல்.26: இன்று அறிவுசார் சொத்துரிமை தினம்! அறிவுசார் சொத | ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி

ஏப்ரல்.26:
இன்று அறிவுசார் சொத்துரிமை தினம்!

அறிவுசார் சொத்துரிமை தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு என்ன என்பது பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கம். 

ஒருவரது அறிவின் வெளிப்பாடான கருத்துகள், வணிக முறைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், கலை படைப்புகள் போன்றவை அறிவுசார் சொத்தாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

எழுத்தாளர்கள், கலைஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள், வணிகர்கள் தங்களின் அறிவுசார் சொத்துகளை மற்றவர்கள் முறைகேடாக திருடிவிடாமல் பாதுகாப்பது அவசியமாகிறது.

இதற்கு அதை காப்புரிமை, பதிப்புரிமை செய்வது அவசியம்.

இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏப்ரல் 26ம் தேதியான இன்று, உலக அறிவுசார் சொத்துரிமை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அறிவுசார் சொத்துரிமை அலு வலகங்கள் தற்போது சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதா பாத்தில் உள்ளன.

அறிவுசார் சொத்துரிமை இயக்கம் சார்பில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது.